Sat. Nov 23rd, 2024

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வடசென்னையில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக தகவல் பரவியது. அதன் பேரில் அங்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக நிர்வாகியை பிடித்து சித்ரவதை செய்து, அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதிமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி திமுக நிர்வாகி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலர் மீது காவல்நிலையில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கடந்த மாதம் பிப்.21 ஆம் தேதி இரவு ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் ஜெயக்குமார் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, மூன்றாவது வழக்கமாக சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக, ஜெயக்குமார், அவரது மகள், அவரது மருமகன் ஆகியோருக்கு எதிராக கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
கடந்த 15 நாட்களில், முதல் மற்றும் இரண்டு வழக்கிலும் ஜாமீன் பெற்ற ஜெயக்குமார், 3 வது வழக்கில் ஜாமீன் கிடைக்காததால், தொடர்ந்து புழல் சிறையிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில், கீழமை நீதிமன்றங்களில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடந்தது.

இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுள்ளதால் 18 நாள்கள் சிறை வாசத்திற்குப் பிறகு இன்று புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிவருவார் என அதிமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இரவு நேர தகவல்

சிறை விதிமுறைபடி மாலை 6 மணி வரை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மீதான உத்தரவு நகல், புழல் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. இதன் காரணமாக, வெள்ளிக்கிழமையான இன்று அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.