திமுக பிரமுகர் தாக்கல் உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நிபந்தனை ஜாமீனில் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, பெஞ்சமின் உள்ளிட்ட அக்கட்சியினர் ஏராளமானோர் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், திமுக அரசு பொய் வழக்குகளை போட்டு தன்னை சிறையில் அடைத்தது. அக்கட்சி பதவியேற்ற நாளில் இருந்தே அதிமுகவை அழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் எழுச்சியை எந்த சக்தியாலும் வீழ்த்திவிட முடியாது என்று தெரிவித்தார்.
பின்னர் அவர் புழல் சிறையில் இருந்து அவரது வீடு உள்ள சாந்தோம் வரை அவரை ஊர்வலமாக அதிமுக நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள அரசு அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதால், அவர் விரைவாக திருச்சி சென்று அங்கு தங்குவார் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.