Thu. Nov 21st, 2024
ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று (பிப்.17)  தொடங்கி வைத்தார்.

சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது :

இந்தியாவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகள் பயன்பெறும் . அடுத்த 5 ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை உருவாக்க 7 லட்சத்து 50 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவையை ஈடுகட்டுவதற்கு உள்நாட்டிலேயே தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், 2030 ம் ஆண்டிற்குள் எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

முதல்வர் பழனிசாமி பெருமிதம்…

பிரதமர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்த இந்த திட்ட நிகழ்வில், தூத்துக்குடியில் இருந்து முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டிலேயே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாடு தன்னிகரற்று விளங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இயற்கை எரிவாயு குழாய் பதிப்பு உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்த விழாவில் பேசிய அவர், கொரோனா காலக்கட்டத்திலும், தமிழ்நாட்டில், புதிய தொழில் முதலீடுகளுக்காக, 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் பட்டுள்ளன/

88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிடைக்கப்பெற்றுள்ள புதிய தொழில் முதலீடுகள் மூலம், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.