கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தகவல்
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து இதோ…
பள்ளியில் நன்றாக படித்த 97% மதிப்பெண் பெற்ற மாணவன் நவீனுக்கு, இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை
தனது மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார்.
நீட் தேர்வை வைத்து பயிற்சி மையங்கள் லாபம் பார்க்கின்றன.
நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு மறுக்கப்படுகிறது .
தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி விதிக்கப்படுகிறது.
நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பின்னணியில் இருப்பது யார்? – குமாரசாமி
பின்னணியில் மத்திய அரசு செயல்படுகிறதா என குமாரசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்…