கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது..
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாக கர்நாடகாவில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. உடை விவகாரத்தில் ஆதரவாகவும் எதிராகவும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
தொடர்ந்து போராட்டத்தின் ஒரு பகுதியாக , தாவண்கரே மாவட்டத்தில் வன்முறை வெடித்தது..சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்..
இதன் எதிரொலியாக, மாணவர்களும், பெற்றோர்களும் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்..
கலவர பூமி
தாவன்கரே மாவட்டத்தில் ஹிஜாபுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.. இதில், 20 இருசக்கர வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
வன்முறை வெடித்த ஹரிஹரா தாலுக்கா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வேண்டுகோள்
மாநிலத்தில் அமைதியை பேணுமாறு மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் வேண்டுகோள்.
ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை மதியம் 2:30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.