Sun. May 12th, 2024

நாடாளுமன்ற மக்களவையில் 2022 – 2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நமது பொருளாதாரம் மீழ்வது பொருளாதார வளர்ச்சியில் தெரிகிறது .

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும்.

உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஆத்ம நிபார் பாரத் திட்டத்திற்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரி செய்து வருகிறோம்.

ஏர் இந்தியாவை விற்கும் நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்துவிட்டது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிப்பு.

நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக ரூ.20,000 கோடியில் புதிய திட்டம்.

நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்; அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

மாநிலங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ரூ 1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்படும்..

அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14% ஆக உயர்வு ; கூட்டுறவு சங்கங்களுக்கான வரிகள் 15% ஆக குறைப்பு.

மத்திய அரசு ஊழியர்களை போலவே மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சலுகை அறிவிப்பு.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு.

இவ்வாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9% அளவிலும் 2023 ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.4% அளவிலும் இருக்கும்.

2022-2023ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த கடன் ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு.

நடப்பு நிதியாண்டிலேயே டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 80 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட இலக்கு.

2030ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி மூலம் 280 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு; நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும்; ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 68% நிதி உள்நாட்டு தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு ; உள்நாட்டு சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.

1 முதல் 12ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும்; அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

நில ஆவணங்களை கணினிமயமாக்கி, ‘ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு’ திட்டம் ஊக்குவிக்கப்படும்.

நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும் ; தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும்.

நகர்ப்புறங்களை மேம்படுத்தவும், திட்டங்களை வகுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவும்; இன்னும் 25 ஆண்டுகளில் 50% மக்கள் நகர்புறங்களில் வசிப்பார்கள்

விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

சுமார் 90 நிமிடங்கள் நிதிநிலை அறிக்கையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர்…

தனிநபர் வருமான வரி விலக்கு பற்றி நிதியமைச்சர் குறிப்பிடாத தல்உ, ச்சவரம்பில் எந்த மாற்றமும் இன்றி பழைய முறையே தொடர்கிறது..