Sun. May 19th, 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுத்தப்பட்ட 2 எம்.டெக் படிப்புகளில் நடப்பாண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில், , எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி, எம்.டெக்., பயோடெக்னாலஜி ஆகிய இரு முதுநிலை படிப்புகளுக்கு நடப்பாண்டிலும் மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த மாணவிகள் சித்ரா. குழலி உள்ளிட்ட சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக முடிவக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதன் மீதான விசாரணை இன்று நீதிபதி பி.புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் நலன் சம்மந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள்? இந்த படிப்பை பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்த என்ன செய்வது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதேபோல, இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் , அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்றும் நீதிபதி யோசனை தெரிவித்தார். 45 மாணவர்களை சேர்ப்பதால் எந்த சிக்கலும் ஏற்படாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த வழக்கு எம்.டெக் படிப்பில் இருந்து இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு திசை மாறி செல்வதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாதா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்தாண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைகழகமே நடத்துகிறது. இந்த நிலையில், இதில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் அது பல்கலைகழகத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தீர்வு காணவும், எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்தும் பிப்ரவரி 18-ம் தேதி அனைத்து தரப்பினரும் விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என நீதிபதி பி.புகழேந்தி உத்தரவிட்டா