Sun. May 19th, 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 எனப்படும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு. வரும் மே 3ம் தேதி முதல் 21 ம் தேதி நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.

காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும்.

காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை  பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு அட்டவணை விவரம் இதோ….

மே 3-ந்தேதி – மொழிப்பாடம்

மே 5-ந்தேதி- ஆங்கிலம்

மே 7-ந்தேதி – கணினி அறிவியல்

மே 11-ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்

மே 17-ந்தேதி- கணிதம், விலங்கியல்

மே 19-ந்தேதி- உயிரியல், வரலாறு

மே 21-ந்தேதி- வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள்