Fri. Nov 22nd, 2024

தலைவர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி. ஆர். பாண்டியனின் அறிக்கை :

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு செய்து கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. ஆனால் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை சொல்லிகொள்முதல் மறுக்கப்பட்டது.

இணையதளத்தில் தனியார் சேவை நிறுவனங்களில் 1வாரத்திற்கு முன் டோக்கன் பெற்று அவர்கள் நிர்ணயிக்கும் தேதியில் தான் அறுவடை செய்து
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு வந்து கொட்டி வைக்க வேண்டும். அதற்கு முன்னதாக நெல் அறுவடை செய்வதையோ, கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொட்டி வைக்கவோ அனுமதிக்கமாட்டோம் என்று கட்டுப்பாடு விதித்தது. இது முற்றிலும் விவசாயிகளுக்கு விரோதமானது. தனியார் வியாபாரிகள் வெளிமாநில நெல்லை பதுக்கி வைத்து இணைய பதிவின் மூலம் குறித்த தேதியில் விற்பனை செய்வதற்கு மட்டும்தான் சாதகமாக இருக்கும், எனவே அதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி அறுவடை செய்த நெல்லை அன்றாடம் நெல் கொள்முதல் நிலைய வாயில் கொட்டி வைத்து முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் பணியாளர்கள் மூலம் ஆன்லைனில் டோக்கன் பதிவு செய்து அதன் அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விரிவாக எடுத்துரைத்தோம் .

ஏற்க மறுத்த தமிழக அரசு ,விவசாயிகள் ஆன்லைன் கொள்முதலை தடுக்கிறார்கள் வெளிமாநில விற்பனை செய்வதற்கு துணை போகிறார்கள் என்று உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை முன்வைதது.

கடந்த 28ஆம் தேதி சென்னையில் நேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனரை சந்தித்து விவரமாக எடுத்துரைத்தேன்.அதனை ஏற்றுக்கொண்ட அவர்(MD) நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் டோக்கன் பதிவு செய்ய உடன் அனுமதி வழங்குவதாகவும்,நெல்லை ஒரு வாரத்திற்கு முன்னதாக கொள்முதல் நிலையங்களில் கொட்ட கூடாது என்கிற காலநிர்ணயம் திரும்ப பெறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்தார்.ஆனால் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது இந்த நிலையில் இன்று 31.01.2022 காலையில் 12 மணி அளவில் சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் எனவும் அனுமதி பெறாமல் ஊர் திரும்பமாட்டேன் என அறிவித்தேன்.

இதனை அடுத்து மேலாண்மை இயக்குனர் அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டுகொள்முதல் நிலையத்திலேயே டோக்கன் பதிவுசெய்து முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வதற்கு உடனடியாக தேவையான அரசாணை பிறப்பிக்கப்படும் அதுவரையிலும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.அதனை தொடர்ந்து 12 மணிக்கு தற்போது அரசாணையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வகையில் வழங்கியுள்ளது.இதற்கு தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள்
பிஆர் பாண்டியன்.