நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் துடிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.. கொரோனா தொற்றின் 3வது தமிழகம் முழுவதும் வேகமெடுத்துள்ள நிலையில் சென்னை போன்ற மாநகரங்கள் மட்டுமின்றி குக் கிராமங்களிலும் கொரோனா பாதிப்பால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது..
தடுப்பூசி பயனாக உயிர்பலி குறைவு என்றாலும் கூட மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.. ஆனால் ஆளும் கட்சியான திமுகவும் அதன் அமைச்சர்களும் தேர்தல் பணிகளில் தான் முழுமையான கவனம் செலுத்தி வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கவலையை பகிர்ந்து கொள்கின்றனர்..
கொரோனா தொற்றிக் இருந்து விடுபட்டு பூரண குணமடைய அர்ப்பணிப்பு மிகுந்த மருத்துவ சிகிச்சை தேவை என்பதை பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தனது அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்..
பொதுமக்களே விழிப்புடன் இருங்கள்.. தேர்தல் பரபரப்பில் உங்கள் வேதனைக்குரல் ஆட்சியாளர்களின் செவிகளை சென்றடையாது…