நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இன்று முழக்கங்களை எழுப்பியும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
திமுக எம்.பி.க்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: