Fri. Nov 22nd, 2024

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் முன்வைத்த இடம் பகிர்வு சதவீதத்தை ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை.. இதனையடுத்து பாஜக தனித்து போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..

கே. அண்ணாமலையின் பேட்டி இதோ….

பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சி.

அதிக இடங்களில் போட்டியிட தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இல்லம்தோறும் தாமரை என்பதே எங்கள் இலக்காகும்.

கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

அதிமுக பாஜக நல்லுறைவு தொடரும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக நீடிக்கிறது.

நயினார் நாகேந்திரன் பேசியதற்கும் கூட்டணி முறிவிற்கு சம்பந்தமில்லை.

பாஜக அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுடன் எந்த வருத்தமும் இல்லை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது என தீர்மானித்துள்ளோம்..

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது;

நகர்ப்புற உள்ளாட்சி தேரத்லில் பாஜக தனித்து போட்டி; தேசிய ஜனநாயக கூட்டணியில் தோழமை தொடரும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்தே தேர்தலை சந்திக்கும்..

அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய உந்துசக்தி.

பாஜகவின் எல்லா திட்டங்களுக்கும் அதிமுக உறுதுணையாக இருந்தது.

2021 தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக முழு ஒத்துழைப்பு கொடுத்தது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் சில சங்கடங்கள் இருந்தன..

இவ்வாறு அண்ணாமலை கூறினார்..

தப்பி பிழைத்தது அதிமுக

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே பாஜகவை அதிமுக கழற்றி விட்டிருந்தால் இன்னும் கூடுதலாக 20,30 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்று இருக்கும்.. அப்போது எடுத்த தவறான முடிவை மீண்டும் ஒருமுறை எடுக்காமல் விவேகம் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டதையடுத்து அதிமுக புதிய எழுச்சியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் கள ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..