Sun. May 19th, 2024

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதையடுத்து சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை..ஆனால் எங்களுடைய இயக்கம் மிகப்பெரிய இயக்கம். நாங்கள் இரண்டு விஷயங்களை பார்க்கவேண்டியுள்ளது.கட்சியின் நலன்,கட்சியினரின் நலன்.இவற்றை பார்க்கவேண்டியுள்ளது.இது பாதிக்காத வகையில்தான் இடஒதுக்கீட்டை வழங்க முடியும்.இந்த அடிப்படையில் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில்தான் அவர்கள் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள்.

அவர்கள் தனித்து நிற்கிறோம் என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவு.அவர்கள் கட்சி எடுத்த முடிவு குறித்து எங்களுடைய கருத்து ஒன்றுமில்லை.பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து விட்டார் மேலும் கட்சியினரும் வருத்தம் தெரிவித்து விட்டனர் இதற்கு தகுந்த கண்டனமும் பதில்களும் அதிமுகவில் இருந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டது இந்நிலையில் இந்த விவகாரம் இத்துடன் முடிவடைந்துள்ளது இதற்கும் கூட்டணிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை

யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம், குதிக்கலாம் ஆனால் மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது முக்கியம். எல்லோரும் புரட்சித் தலைவராக ஆகிவிட முடியாது.
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் கூட்டணியில் இருந்தது.சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இருந்தது.நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி இருந்தது.தற்போது ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.இதில் கூட்டணி இல்லை.அவர்கள் தனியாக நிற்கிறார்கள்.நாங்கள் சில கட்சிகளுடன் மக்களை சந்திக்க உள்ளோம்.

எதிர்வரும் காலத்தில் அது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி,நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி அவர்களுடைய கருத்தை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.அந்த விருப்பத்தை பற்றி நான் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்ல முடியாது..கூட்டணியில் இருக்கிறதா,இல்லையா என்பதை கட்சிதான் முடிவு செய்யவேண்டுமே ஒழிய,இன்றைய நிலை குறித்து மட்டும்தான் நான் சொல்ல முடியும்.அடுத்த நடக்கவுள்ளது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.நான் முடிவு எடுக்க முடியாத விஷயம் அது.


2016 ல் அம்மா தனியாகதான் நின்றார்கள்.யாருடைய கூட்டணியியும் இல்லையே.ஒரு மகத்தான வெற்றியை கழகம் பெற்று அம்மாவின் ஆட்சி அமைந்தது.1972ல் புரட்சித்தலைவரால் இயக்கம் ஆரமிக்கப்பட்டு,மாபெறும் வெற்றியைப் பெற்றது.இன்றைக்கு இருபெரும் தலைவர்கள் இல்லை.ஆனால் இரு தலைவர்களின் நல் ஆசி உள்ளது.எங்களுடைய வெற்றி சின்னம்.இரட்டை இலை உள்ளது.மேஜீக் சின்னம் உள்ளது.இதை தவிர அம்மா ஆட்சி செய்த சாதனைகள்.இதனை மக்கள் நினைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடியார் ஆட்சியில் பொங்கலுக்கு 2,500 அளித்தோம்.பொங்கல் தொகுப்பு அளித்தோம்.எந்த புகாரும் இல்லை. சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது.காவல்துறைக்குப் பாதுகாப்பு இருந்தது.ஆனால் இப்போது காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை.அதுமட்டுமல்லாமல் எம்பி மீது கொலை வழக்கு,எம்எல்ஏ அடாவடிதனம்.கே.பி.பி.சங்கர் செய்த அடாவடித்தனத்திற்கு ஒரு அளவே இல்லை.விளாத்திகுளத்தில் ஒரு எம்எல்ஏ சோலார் பவர் போட்டவர்களை மிரட்டியுள்ளார்.இதனை எல்லாம் மக்கள் பார்த்துவருகிறார்கள்.

கட்டபஞ்சாயத்து,அடாவடித்தனம்,அராஜகம் இவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக திமுக அரசு உள்ளது. இந்த விடியா அரசு என்பது ஒரு விளம்பர அரசு.எங்கள் ஆட்சியின் சாதனைகள்,திமுக அரசின் வேதனைகள்.இதுதான் இப்போது போட்டி.சாதனை கைகொடுக்குமா? வேதனை கைகொடுக்குமா.

சாதனை கைகொடுக்கும்.அதுபோல சாதனை நிச்சயமாக எங்களுக்குக் கைகொடுக்கும்.மகத்தான வெற்றியை நாங்களும் எங்கள் உடன் இருப்பவர்களும் பெறுவார்கள். அதிமுக கூட்டணியில் தாமாக உள்ளது.சமத்துவ மக்கள் படை உள்ளது.புரட்சி பாரதம் உள்ளது.இன்னும் பல கட்சிகள் வரலாம்.இவர்களுக்கு இடஒதுக்கீடு செய்துவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.

சிங்கம் சிங்கலாதான் வரும்.எங்களை பொறுத்தவரைத் தனியாக நின்று வெற்றிபெற்ற வரலாறு இருக்கிறது. சிங்கம் சிங்கலாக நின்று வெற்றிபெறுவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.