Fri. Apr 18th, 2025

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியில் இருந்து எம்.பி நவநீத கிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார்…

இதுதொடர்பாக அக்கட்சியின் இரட்டை தலைவர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி கே எஸ் இளங்கோவனின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட நவநீதகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்தி பேசினார்.. அப்போது அவர் திமுக எம்பி கனிமொழி, டி கே எஸ் இளங்கோவன், முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோரை வெகுவாக புகழ்ந்து பேசினார்..

திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டது மட்டுமின்றி முன்னணி திமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வரை பாராட்டி பேசியது அதிமுக முன்னணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது..

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நவநீதகிருஷ்ணனின் கட்சி விரோத நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.. இதனையடுத்தே நவநீதகிருஷ்ணன் வகித்து வரும் கட்சிப் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டு உள்ளது என்று அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்..