Sat. Nov 23rd, 2024

சேலத்தில் விரைவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் சேலத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சேலத்தில், ரூ. 300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தையும், ரூ. 100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தையும் துவங்கி வைத்தார். தொடர்ந்து 68 கோடி ரூபாய் மதிப்பில் 30,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் முதல்வர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கூறினார். அதனை நிரூபிக்கும் வகையில் 20 மணிநேரத்திற்கு மேலாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

சேலத்தில் விரைவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். 120 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் வருவேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விழா துவங்கும் முன்பாக தமிழக அரசு நேற்று அறிவித்திருந்ததற்கு ஏற்ப, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவை கொண்டு இசைக்காமல், வாழ்த்துப் பாடலில் ஏற்கெனவே பயற்சி பெற்ற இனிய குரலுக்கு சொந்தமான இசை மகளிர்கள் பாடியதை கேட்டு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மெய் சிலிர்த்தனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, முத்துசாமி, எம்.ஆர்.பன்னீர்செல்வம், மதிவேந்தன், ஆட்சியர் கார்மேகம், எம்.பி.பார்த்திபன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சேலம் விழாவில் முதல்வர் ஆற்றிய உரை: