Sun. Apr 20th, 2025

மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுக்கூர்ந்துள்ளார்.

முதல்வரின் வாழ்த்துச் செய்தி இதோ….

தமிழக அரசின் சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் பீடத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு அலுவலகர்கள் உள்பட மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த ஆளுநர் ரவி, அந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதியாரின் திருவுருச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.