முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தகவல் வெளியானவுடன், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ், சென்னையில் இருந்து விமானம் மூலம் உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்குச் சென்ற டிஜிபி, அங்கிருந்த முப்படை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து இன்று குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து புலன் விசாரணையை டிஜிபி சைலேந்திரபாபு துவக்கினார். அப்போது, விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்ட காவலர்களை டிஜிபி வெகுவாக பாராட்டினார்.
இதுதொடர்பாக காவல்தறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ…