Tue. Dec 3rd, 2024

குஜராத் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வதோதாரா மாவட்டம் நிஜம்புராவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது, திடீரென்று மயங்கி மேடையிலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரது பாதுகாவலர்கள், அவரை தாங்கிப் பிடித்தனர். மேடையிலேயே முதல்வருக்கு முதலுதவி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பார். அங்கு அவருக்கு கொரோனோ உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றன. இதில், பரிசோதனை முடிவில் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனோ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு கொரோனோ தொற்றுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.