Mon. May 20th, 2024

நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பவ மாவட்டங்களில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அடுத்தடுத்து வீசிய நிவர் மற்றும் புரவி புயல்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் சேதமடைந்தன. புயல் பாதிப்புகளை சீரமைக்க 3,750 கோடி ரூபாயும், புரவி புயல் பாதிப்புகளை சீரமைக்க 1,514 கோடி ரூபாயும் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டது. இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.

புயலால் பாதிக்கப்பட்ட அந்த மாவட்டங்களில் மத்திய குழு 2 நாட்கள் நிவர் புயல் பாதிப்பையும், 3 நாட்கள் புரவி புயல் பாதிப்பையும் ஆய்வு செய்தது. பின்னர் டெல்லி திரும்பிய மத்தியக் குழு, புயல் பாதிப்பு குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

அதன் பேரில், புயல் நிவாரண நிதியாக, தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிவர் புயலுக்கு ரூ.63 கோடியும் புரவி புயலுக்கு ரூ.223 கோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒப்பதல் வழங்கப்பட்டது.