Fri. Nov 22nd, 2024

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ரவியை நேரில் சந்தித்தனர். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினர். அந்த மனுவில்,

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அந்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 9 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி, ஒன்றிய வார்டு தேர்தல்களில் திமுக அமோக வெற்றிப் பெறும் வகையில் முன்னிலை விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியடைந்துள்ள நிலையில், பாஜக மாவட்ட, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் கூட வெற்றிப் பெறவில்லை. இந்த நேரத்தில், மக்களின் தீர்ப்பு விரோதமாக திமுக ஆட்சி மீது பழி சுமத்தி அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே ஆளுநரை சந்தித்து பாஜக தலைவர்கள் மனு கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டுள்ளதாக திமுக முன்னணி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.