ஒரு மாநில முதல்வர் மற்றொரு மாநிலத்திற்கு செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துவதுதான் ஜனநாயகமா? ராகுல்காந்தி....
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி, புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நேற்று லக்னோவில் இருந்தார். ஆனால் அவரால் லக்கிம்பூர் செல்ல முடியவில்லை. நாங்கள் இரண்டு முதல்வர்களுடன். இன்று லக்கிம்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களை உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் செல்ல, அம்மாநில பாஜக அரசு அனுமதியளிக்க மறுக்கிறது.
மத்திய பாஜக அரசு, விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இது ஆணவத்தின் உச்சக்கட்டம். அவர்கள் விவசாயிகளைத் தூண்டிவிடுகிறார்கள். அதன் மூலம் அவர்களை பாஜக ஆட்சயிளர்கள் விவசாயிகளைக் கொல்கிறார்கள். இது மிக மிக மோசமான நடவடிக்கையாகும். . முன்பு ஹத்ராஸில் இதுபோன்றுதான் நடந்தது. அந்தநேரத்தில் குற்றவாளிகள் தண்டனையின்றி தப்பித்து ஓடினார்கள. தற்போது உ.பி.யில் நடந்து கொண்டிருப்பது ஒரு புதிய வகையான அரசியல்.
குற்றச் செயல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. நாங்கள் அதைச் செய்கிறோம். முன்னதாக நாங்கள் ஹத்ராஸுக்குச் சென்று அழுத்தத்தைக் கட்டினோம். அதன் காரணமாக பாஜக எம்எல்ஏவின் ஈடுபாடு குறித்து அம்பலப்படுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் அந்த போராட்டத்தை கையில் எடுக்கவில்லை என்றால், பாஜக எம்.எல்.ஏ. கைது நடவடிக்கை நடந்திருக்காது.
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட நிகழ்வில் மத்திய அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் தொடர்பு இருப்பதற்கு தேவையான ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குற்றச் செயல்களுக்காக ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டமும். இது உங்கள் கடமை (ஊடகம்). ஒரு மாநில முதல்வர் வேறு மாநிலத்திற்கு செல்ல முடியாது என்றால் என்ன அர்த்தம். இங்கு சர்வாதிகாரம் தலை தூக்கிறது என்றுதானே அர்த்தம்.
ஏன் இந்த சர்வாதிகாரம்? ஏனெனில் பெரிய அளவிலான கொள்ளை நடக்கிறது. விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில் துறையினர் என ஒவ்வொருவரிடமிருந்தும் கொள்ளை நடக்கிறது. இதை மறைக்க இந்தியா ஒரு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது.
பாஜக அரசுகள் மீது விவசாயிகள், மக்கள் நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள். அனாதரவாக இருக்கும் விவசாயிகளுக்கு, மக்களுக்கு நம்பிக்கையளிக்க காங்கிரஸ் எப்போதும் ஆதரவாக களத்தில் நிற்கும்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.