வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹ 15 உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.15 உயர்ந்து ரூ.915 ஆனது
சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. தற்போதைய விலையில் இருந்து 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 915 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் 300 ரூபாய் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், குறிப்பாக குடும்பத் தலைவிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனோ தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களை, குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், மாதந்தோறும், இல்லை இல்லை மாதத்திற்கு இரண்டு முறை சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொண்டே வருகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் ஏற்றி வாகன ஓட்டுனர்களை நிலைகுலைய வைதது வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், தற்போது குடும்ப பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் சமையல் எரிவாயு விலையையும் மாதந்தோறும் ஏற்றி வருகின்றன.
கொரோனோ தாக்கத்திற்கு உள்ளான நியூசிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில், அந்நாட்டு குடிமக்களின் துயரத்தைப் போக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகளை மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனோ தாக்கத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவித்த எந்தவொரு சலுகையும் முழுமையாக மக்களுக்கு சென்றடையாத நிலையிலும், இந்தாண்டும் கொரோனோ தாக்கத்தால் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பொதுமக்களின் துயரத்தைப் பற்றி துளியும் கவலைப்படாத வகையில்தான் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலார்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்தாண்டு செம்படம்பர் மாதம் 610 ரூபாக இருந்த சமையல் எரிவாயு, அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் ஒரேடியாக 100 ரூபாய உயர்த்தப்பட்டு 710 ரூபாயாக விற்பனையானது. இரண்டு மாதங்களுக்குள், அதவாது நிகழாண்டு பிப்ரவரி மாதம் மேலும் 75 ரூபாய உயர்த்தப்பட்டு 785 ரூபாய்க்கு விற்பனையானது. அந்த மாதத்தில் இருந்து தொடாந்து ஒவ்வொரு மாதமும் விலை உயர்த்தப்பட்டு கொண்டே வருகின்றது.
இன்றைய தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.915 க்கு
புதிய விலை உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. .