Fri. Nov 22nd, 2024

இந்திய சுதந்திரப் போராட்ட வேட்கையை கட்டியெழுப்பியவரும், வெள்ளையனே வெளியேறு என்று தராக மந்திரத்தை முழங்கி, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்தவர்களில் தலையாய சிற்பியாக விளங்கியவர் மகாத்மா காந்தியடிகள்.

அவரின் 153 வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுதில்லியில் ராஜ்காட்டில் உள்ளள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆந்திர மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஹைதராபாத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி எம்.பி.யும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, தூத்துக்குடியில் மகாத்மா காந்தியடிகள் திருவுருச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் மகாத்மாவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.