Thu. May 9th, 2024

நிதித்துறை அமைச்சர் பிடிஆர்.தியாகரான்இன்று காலையில் 6 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றார்.

உள்நாட்டு விமான நிலையத்திற்கு காலை5.15 மணிக்கு வந்த அமைச்சரிடம் பாதுகாப்பு சோதனை பிரிவில் இருந்த அதிகாரி ஒருவர் அவரின் கைப்பையை ஸ்கேன் மூலம் சோதனை செய்தார்.

அப்போது, அமைச்சரின் கைப்பையில் இரண்டு லேப்டாப்கள் இருந்தது தெரியவந்தது. மாநில அமைச்சர் என்று அறிந்த பிறகும் இரண்டு லேப்டாப்களை எதற்காக எடுத்துச்செல்கிறீர்கள்? என்று விசாரணை என்ற தோரணையில் அந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கேட்டார்.

அதற்கு பொறுமையாக, நான் மாநில நிதி அமைச்சர். அவசர தேவைக்காக எடுத்துச்செல்கின்றேன் என்று அமைச்சர் சொன்ன விளக்கத்தை அந்த அதிகாரி ஏற்றுக் கொள்ளவில்லை.
இரண்டு லேப்டாப்கள் எடுத்து சென்றால் பயணம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறி அங்கிருந்து செல்ல அமைச்சரை அனுமதிக்கவில்லை. இதனால், கோபமடைந்த அமைச்சர், விமான நிலைய விதிமுறைகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டார். அந்த அதிகாரிக்கு தமிழ் மொழியை புரிந்து கொள்ளும் அறிவு இல்லாதபோதும், ஆங்கிலத்தில் பேசுவதையும் அந்த அதிகாரியால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனையடுத்து, அமைச்சர் பழனிவேல்ராஜன், அவருக்கு தெரிந்த ஒரே ஒரு மொழியான ஹிந்தியில், பாதுகாப்பு அதிகாரியை வெளுத்து வாங்கினார்.

அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமான நிலைய உயரதிகாரிகளும், பாதுகாப்பு படை அதிகாரிகளும் அங்கு வந்துவிட்டனர். ஒரு பயணி இரண்டு லேப்டாப் விமானத்தில் எடுத்து செல்லக்கூடாது என்று விதிமுறை இருக்கிறதா? என்று அமைச்சர் எகிற, நடந்த தவறுக்கு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

அமைச்சருடன் வாக்குவாதம் செய்த அந்த அதிகாரியும் மன்னிப்பு கேட்டார். இதன் பிறகே அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தூத்துக்குடி புறப்பட்டுச் செனறார். அப்போது விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பலர், நிதியமைச்சரின் பன்மொழி புலமையையும், தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் துணிச்சலையும் வெகுவாக பாராட்டினார்கள்.