பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) திமுக சார்பில் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பாக,
பெரியார் விருதை மிசா மதிவாணனுக்கும், பேரறிஞர் அண்ணா விருதை எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருதை கும்மிடிப்பூண்டி வேணுக்கும், பேராசிரியர் விருதை முபாரக்கிற்கும், பாவேந்தர் விருதை வாசுகி ரமணனுக்கும் வழங்கி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
உரையின் சுருக்க வடிவம்……..
தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்கிற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்.
9 மாவட்டங்களில் வருகிற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதன்பிறகு வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும்.
கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம். – ஸ்டாலின்.
ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இனி வருகிற ஒவ்வொரு மாதங்களிலும் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
இந்த விழாவில் முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி – சில நினைவலைகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது.
https://twitter.com/mkstalin/status/1438102893823873032?s=20