Sun. May 19th, 2024

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி இன்று காலை சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவிக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், நீதிபதிகள், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கொரோனோ தொற்று அச்சத்தின் காரணமாக, ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்து வெளியில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

ஆளுநராக பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஆர்.என்.ரவி.

அதன் விவரம் இதோ…..

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன்.

பாரம்பரியம், பண்பாடு மிக்க தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் மகிழ்ச்சி.

அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன்

அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன்.

என்னால் இயன்ற அளவு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன்.

இவ்வாறு ஆளுநர் கூறினார்.