அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, இன்று காலை முதல் மாலை வரை அவருக்கு சொந்தமான வீடு, வணிக நிறுவனங்கள், கல்லூரி மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கே.சி.வீரமணி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்…..
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டில் கைப்பற்றப்பட்டவை விவரம்:
ரோல் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள்.
ரூ.34 லட்சம் ரொக்கம்
அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ 1.80 லட்சம்
5 கிலோ தங்கம்.
47 கிராம் வைர நகைகள்
7 கிலோ வெள்ளி
275 யூனிட் மணல் (ரூ 30 லட்சம் மதிப்பு)
அமெரிக்க ரூபாயான டாலர் ரூ.1.80 லட்சம்...