அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
கே.சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜோலார்பேட்டை , திருப்பத்தூர், ஏலகிரி மலை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்..
2011 முதல் 2021 வரை பத்தாண்டுகள் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 28.7 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து உள்ளதாக கே. சி. வீர மணிக்கு எதிராக புகார்கள் கூறப்பட்டது.. அதன் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது..
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை குறித்து தகவல் பரவியதுடன் அதிமுக தொண்டர்கள், முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டின் முன்பு திரண்டனர். திமுக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டு முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக 654% சதவிகிதம் (28.78 கோடி ரூபாய்க்கு) வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்