Sat. May 18th, 2024

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பாமகவுக்குத்தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..

செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது.

அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து விமர்சித்தால் நாங்களும் பாமகவை விமர்சிக்க நேரிடும்.

எங்களது ஓட்டு வங்கியில் எந்த வித பாதிப்பும் இல்லை; ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப்போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு .

இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறினார்..

செல்லூர் ராஜீவ் பதிலடி

கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலதான் என்று மற்றொரு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்..

தேவை என்றால் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம்.

கூட்டணியை நம்பி அதிமுக இல்லை.

கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில்தான் எடுபடும்.

பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை..

இவ்வாறு செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ.கூறியுள்ளார்

One thought on “பாமகவுக்குத்தான் இழப்பு – ஜெயக்குமார் காட்டம்..”

Comments are closed.