Sat. May 4th, 2024

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஏற்கெனவே அறிவித்தபடி பெங்களூரில் இருந்து சசிகலா காரில் புறப்பட்டார்.. ஓசூர் எல்லையில் அ.ம.மு.க நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.. அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க சென்னை நோக்கி சசிகலா பவணி வருகிறார்..

வாணியம்பாடி அருகே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது அவர், அதிமுகவுக்கு சோதனை வந்த போது பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்தோம் என்றும் தெரிவித்தார்..

அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவோம் என்றும் தமிழ் பண்புக்கு நான் அடிமை, கொள்கைக்கு நான் அடிமை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வளர்க என சசிகலா முழக்கம் எழுப்பினார்..

எம்ஜிஆர் பாடலை சுட்டிக்காட்டிய சசிகலா காரில் அமர்ந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கள்விகளுக்கு பதிலளித்த சசிகலா, நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும் உறுதிபட கூறினார்…

ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என வும் சசிகலா பதிலளித்தார்…