இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ…
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம்.
பிப்ரவரி 24 முதல் மார்ச் 5-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில் ரூ.15,000, புதுச்சேரியில் ரூ.5000, கேரளாவில் ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும்.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தரலாம்.
இவ்வாறு அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.