மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது.
நாடு முழுதும் 16 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.10 லட்சம் பேரும் தேர்வு எழுத உள்ளனர்.
முழுதும் 202 நகரங்களில் 3,862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் 70 ஆயிரம் மாணவியர் மற்றும், 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
சென்னை, கோவை, கடலுார், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் நகரங்களில் மொத்தம், 224 பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிற்பகல் 2 மணிக்கு துவங்கும் நீட் தேர்வு க்காக மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்…