Thu. May 2nd, 2024

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்லில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்து பேசிய அவர், பின்னர், மாலை 5 மணியளவில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வந்தார்.

அங்கு நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளின் சார்பில் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாகவது

உங்களது குறைகளை மனுக்களாக நீங்கள் கொடுத்துள்ளீர்கள். தேர்தல் முடிந்ததும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் உங்கள் மனுவில் உள்ள குறைகள் தீர்க்கப்படும். இந்த மனுவிற்கான குறைகள் தீர்க்கப்படவில்லையென்றால் கோட்டைக்கு வந்து முதல்வர் அறைக்கு என்னிடம் வந்தே கேட்கலாம்.

முதல்வர் மீதான ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக விசாரிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கினார் இல்லாவிட்டால் முதல்வர் பதவியில் இருந்திருக்க மாட்டார். ஸ்டே வாங்கி கொண்டு ஒரு ஸ்டேட்டையே ஆண்டு கொண்டிருக்கிறார் அவர் ஒரு ஸ்டேட் சிஎம் இல்லை, ஸ்டே சிஎம். எடப்பாடி பழனிசாமி.

பச்சை துண்டு விவசாயி அல்ல பச்சை துரோகி விவசாயி. அவர் மண்புழு போல் உருண்டு ஒருவர் காலை பிடித்து பதவி வாங்கினாரா இல்லையா? யார் காலை பிடித்து பதவி வாங்கினாரோ அவர் காலையே வாரி விட்டார் இன்னும் இரண்டு நாளில் என்னென்ன நடக்க போகிறதோ

யாருடைய காலில் ஊர்ந்து போய் பதவியைப் பெற்றாரோ அவரது காலையே வாரியவர். இன்னும் இரண்டு நாட்களில் என்னென்ன செய்திகள் வரப்போகிறது பாருங்கள். ஊர்வலம் என்கிறார்கள், தடை என்கிறார்கள். நினைவிடத்திற்குப் பூட்டுப் போட்டுவிட்டார்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை வேடிக்கை பார்ப்போம். இப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தை சசிகலாவுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் செய்தவர், செய்து கொண்டு இருப்பவர் தான் பழனிசாமி. இந்த பச்சைத் துரோக பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., எம்எல்ஏ.,க்கள் டிபிஎம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், முன்னாள் எம்எல்ஏக்கள் மு.அப்பாவு என்.மாலைராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Dailyhunt