Thu. May 9th, 2024

சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், மே 7 ஆம் தேதியில் இருந்து ரொம்ப பிஸியாகவே இருக்கிறார். மே, ஜுன், ஜூலை, ஆகஸ்ட் என அனைத்து மாதங்களிலும் ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல் மக்கள் நல்வாழ்வுத்துறைப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகின்றார்.

கொரோனோ தொற்றுப் பரவலை வெகு வேகமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம மாநிலம் முழுவதும் செயல்படும் அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டிறக்க பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றார்.

பல லஞ்சம் ரூபாய் லட்சமாக கொடுத்து மருத்துவத் துறையில் கடந்த காலங்களில் பெற்று வந்த பணிமாறுதலைகளை, திமுக நிர்வாகிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பொது கலந்தாய்வு மூலம் நிறைவேற்றி, சுகாதாரத்துறை அதிகாரிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மேலும், சுகாதாரத்துறையை மேம்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை நிறைவேற்றி வருவதுடன், மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் சென்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட தலைமை மருத்துவமனை வரை முன்னறிவிப்பு இன்றி திடீரென்று ஆய்வு செய்து, மக்களின் தேவைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கிறார் என்று அரசியல் சார்ப்பற்ற மக்களே பெரிதும் பாராட்டுகின்றனனர்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சட்டப்பேரவை நாள்தோறும் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் வார விடுமுறை நாட்களில், சைதாப்பேட்டை தொகுதிக்குள் சுற்றி வந்து, அந்த தொகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கிறார். ஒருநாள் கூட ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்றைய தினமும் சைதாப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு சென்னை மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில் 109 பயனாளிகளுக்கு ரூ.776269 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கியுள்ளார்.

இந்த விழாவில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி மற்றும் உயர் அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.