Fri. Nov 22nd, 2024

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை, தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தும், மகளிர் சுயமரியாதையுடன், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வாழ்வதற்காக நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து நிகழ்வில் பேசும்போது, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.

இதனிடையே, ரமணா நகரில் 111.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 840 வீடுகள் அடங்கிய கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.