Fri. Nov 22nd, 2024

சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக-பாஜக.வைத் தவிர்த்து மற்ற கட்சிகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன.

தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. ஆனால்,அதிமுக- பாஜக உறுப்பினர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன்

.இந்த தீர்மானத்தை ஆதரித்து பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் பேசியதாவது:விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வேளாண் சட்டங்கள் உள்ளன; விவசாயிகளின் வேதனையை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம் என்று தெரிவித்தார்.

போராட்ட வழக்குகள் வாபஸ்

வேளாண் சட்டம் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, தமிழகத்தில் அந்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது முந்தைய அதிமுக ஆட்சியின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறவித்தார்.

முதல்வர் முன்மொழிந்த வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் முழு விவரம்….