Fri. May 17th, 2024

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி அலுவலகத்திற்கு வரும் பெண் நிர்வாகிகளை வித்தியாசமான கோணத்தோடு அணுகி வருகிறார் என்று யூ டியூபர் மதன் ரவிச்சந்திரன் புகார் தெரிவித்திருந்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி பாஜக தேசிய செயலாளர் கே.டி.ராகவனுக்கு எதிராக வீடியோவை வெளியிட்ட அவர், அண்ணாமலை சொல்லிதான் அந்த வீடியோவை வெளியிட்டதாகவும், தன்னிடம் பலமுறை பேசிய அண்ணாமலை, முரண்பாடாக பல கருத்துகளை தெரிவித்ததாகவும், ஆடியோ மூலம் வெளியிட்டு அவர் இன்று முகநூலில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம் பற்றி மதன் ரவிச்சந்திரன் கூறிய புகார்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் நற்பண்புகளை பட்டியலிட்டு நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். அவருக்கு எப்போதும் தான் ஆதரவாக இருப்பதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.