பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் அதிரடி..
அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்த குற்றவியல் அவதூறு மான நஷ்ட வழக்கில் நேற்றைய தினம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து இன்றைய தினம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் தனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது
அவர்கள் (ஆகஸ்ட் 24 )இன்று ஆஜராகாமல் அவர்களது சார்பில் வழக்கறிஞர்கள் 317 மனுவினை தாக்கல் செய்து ஆஜர் ஆகாமல் இருக்க அனுமதி கூறினார்கள் சட்டமன்றத் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டியிருப்பதால் வர இயலவில்லை என்று கூறினார்கள்
அதனை ஏற்க மறுத்த தனி நீதிமன்றம் அவர்களது மனுவை தள்ளுபடி செய்து அவர்கள் இருவரும் கண்டிப்பாக செப்டம்பர் 14 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்
எடப்பாடி கே பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் அளித்த மனுவை நீதிபதி ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார் வா.புகழேந்தி சார்பில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி மற்றும் இம்ரான் ஆகியோர் ஆஜரானார்கள்….