Sat. Nov 23rd, 2024

சட்டபேரவையில் நகராட்சி துறையின் மானிய கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் கேஎன்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதன் விவரம் இதோ. .

தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.

      பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திகிராம், கூடுவாஞ்சேரி நகராட்சிகளாக மாற்றப்படும்..

எல்லை அறிவிப்பு

தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக அறித்தது தமிழ்நாடு அரசு; தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது..

புதிய நகராட்சிகள்

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும்

பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கொல்லன்கோடு பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும்

கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம் பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும். இவ்வாறு கே என் நேரு பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்..