Sat. May 18th, 2024

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்ததுடன் கூட்டத்தொடர் முழுவதும் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அக்கட்சித் தலைவர் மு..க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். .

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.

சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்தும் திமுக வெளிநடப்பு செய்தது..

முன்னதாக, எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்வதை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பினர்
“எனது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் தி.மு.கவினர் 5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு அவைக்கு திரும்பலாம்” என ஆளுநரே ஆலோசனை கூறியதால் எதிர்கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார் .

மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது என்றும், அதிமுக அரசு மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனறும் குற்றம்சாட்டினார். .

7 தமிழர் விடுதலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறிய ஸ்டாலின் தமிழக சட்டசபை நடப்பு கூட்டத் தொடர் முழுவதையும் திமுக புறக்கணிக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.