Sat. Nov 23rd, 2024

நீதிபதிகள் நியமனம் இடம் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜிம் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது, சென்னை உயர்நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் பல்வேற உயர்நீதிமன்றங்களின் பணியாற்றும் 9 நீதிபதிகளை, உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உள்பட 8 நீதிபதிகள் பதவி உயர்வு பெற்று விரைவில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றவுள்ளனர்.

அதன் விவரம் இதோ…..

கொலீஜியம் பரிந்துரை செய்துள்ள பட்டியலில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி பி.வி.நாகரத்தினா (கர்நாடக உயர்நீதிமன்றம்), தலைமை நீதிபதி ஹிமா கோகுலி (தெலுங்கானா உயர்நீதிமன்றம்), நீதிபதி பீலா திரிவேதி (குஜராத் உயர்நீதிமன்றம்), தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகே (கர்நாடக உயர்நீதிமன்றம்), தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ( குஜராத் உயர்நீதிமன்றம), தலைமை நீதிபதி விக்ரம் நாத் (சிக்கிம் உயர்நீதிமன்றம்) நீதிபதி சி.டி. ரவிக்குமார் (கேரள உயர்நீதிமன்றம் ) மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா,

கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 9 பேருக்கான பணி நியமன உத்தரவை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.