7 பேர்விடுதலையில் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் தன்னை விடுதலைச் செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவரின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 7 பேர் விடுதலை தொடடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் எந்தவிதமான முடிவையும் நீதிமன்றம் எடுக்க முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், அதனை எதிர்த்து மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.