Sat. Nov 23rd, 2024

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயல்படுத்தி வரும் புரட்சிகரமான நடவடிக்கைக்கு வழக்கம் போலவே எதிர்பார்க்கப்பட்ட சமுதாயத்தினரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அவர்களின அச்சத்தைப் போக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திரும்ப திரும்ப உறுதியான விளக்கத்தை அளித்தாலும் கூட, அவர்களின் வார்த்தைகள் மீது நம்பிக்கையில்லாதவர்கள், இன்னும் சொல்லப் போனாலும் வேண்டும் என்றே குதர்க்கம் சொல்லும் மனம் படைத்தோரை திருப்திபடுத்த முடியவில்லை என்கிறார்கள் அரசு உயரதிகாரிகள்.

இப்படிபட்ட சூழ்நிலையில்தான் பிராமணர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுடன் உரையாடும் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ மூலம் திரும்ப திரும்ப ஒரு கருத்தை அமைசசர் சேகர்பாபு உறுதிபட தெரிவிக்கிறார். ஏற்கெனவே பணியில் உள்ள எந்தவொரு அர்ச்சகரையும் பணியில் இருந்து நீக்க மாட்டோம் என ஆணித்தரமாக, பொறுமையாக, நிதானமாக பதில் அளிக்கிறார். அரசாட்சி தங்களிடம் இருக்கிறது என்ற ஆணவம் துளி கூட அமைச்சர் சேகர்பாபுவிடம் இல்லை. இப்படிபட்ட மனிதநேயம் படைத்த அமைச்சரின் கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத்துறை, முந்தைய ஆட்சிக்காலத்தை விட சிறப்பாகவே இயங்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக சமய ஆன்றார்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் சேகர்பாபு மற்றும் பிராமணர் சங்கத் தலைவருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் இதோ….