75 வது சுதந்திர தின த்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார் . பின்னர் பிரதமர் மோடி ஆற்றிய உரை:
காந்தி, நேதாஜி, உள்ளிட்ட தலைவர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம்; நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரின் அரும்பணிகளையும் நினைவுகூர்வோம்.
சுதந்திர தினத்தில் கொரோனாவுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் வணக்கங்கள்.
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட நமது விளையாட்டு வீரர்களை பாராட்டுவோம்; சிறப்பாக விளையாடிய அவர்கள், தேசத்தின் பெருமையை ஒலிம்பிக்கில் நிலைநாட்டினர்.
கொரோனா மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக மாறியது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்பது பெருமைக்குரியது.
நாட்டில் இதுவரை 54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவினுடையது.
விவசாயத்தில் புதுமை
ரயில்வே, நீர்வழி போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன; சிறு நகரங்களை இணைக்கும் வகையில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையங்கள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன.
விவசாயத்தில் புதுமையை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; அடுத்த தலைமுறையினருக்கு கட்டமைப்புகளை ஏற்படுத்த உழைத்து கொண்டிருக்கிறோம்.
விவசாயிகள் நலனுக்காக விளை பொருட்களை சேமித்து வைக்க ஏதுவாக கிராமங்கள் தோறும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
நமது கிராமத்து விவசாயிகளின் விளை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது; விவசாயிகள் நலனுக்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி பயணம்
நாம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்; அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் உள்ளது, புதிய இந்தியாவை சிறப்பாக கட்டமைக்க கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.
நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது; கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை.
நாம் கைபேசிகளை இறக்குமதி செய்த நிலை போய், தற்போது 3 பில்லியன் கைபேசிகளை ஏற்றுமதி செய்கிறோம்; நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்ததாகவும், உலக தரத்துக்கு இணையாகவும் இருக்க வேண்டும்-
கொரோனோ காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன….
கிராமங்களில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்ய கதிசக்தி திட்டம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் திட்டம் விரைவில் செயல் பாட்டுக்கு வரவுள்ளது…
இவ்வாறு பிரதமர் கூறினார்..
ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி மரியாதை:
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றிய உடன் ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டது.
விமானப்படைக்கு சொந்தமான 2 MI17 ஹெலிகாப்டர்கள் வானில் இருந்தபடி மலர்தூவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் தேசியக் கொடியை ஏற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவது இதுவே முதல்முறை.
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா இன்று கோலாகல கொண்டாட்டம்.
இன்று அதிகாலையில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்..
முப்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி…