அதிமுக வெளிநடப்பு….
காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வழக்கமான முறையில் இல்லாமல் கையடக்க கணினியுடன் சட்டமன்றத்திற்கு வந்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தொடர்ந்து, 2021 – 22 ஆம் ஆண்டிற்காக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார்.
கொரோனா 2ம் அலை கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் தாக்கியது; கொரோனா பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் இந்த பட்ஜெட் உரையில் உள்ளன.
மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை பெற நிபுணர் குழு அமைக்கப்படும்.
பெட்ரோல், டீசல் வரி உயர்வால் மத்திய அரசுக்கு 69% வருவாய் அதிகரித்துள்ளது.
மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது ₹10 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்.
கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கீடு.
கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும்; கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ₹80 கோடியும், தொல்லியல் துறைக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ₹4,807 கோடி நிதி ஒதுக்கீடு.
தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது; இத்திட்டத்தை செயல்படுத்த ₹500 கோடி வரை நிதி ஒதுக்கீடு.
காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
காவல்துறைக்கு ₹8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைமப்பு மற்றும் மீட்புத்துறைக்கு 405.13 கோடி ஒதுக்கீடு
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படும். ஆய்வு மேற்கொள்ள 6.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அணை சீரமைத்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்காக 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
வரும் பத்தாண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் அமைக்கப்படும்.
நீர்பாசனத் திட்டங்களுக்கு 6,607.17 கோடி ஒதுக்கீடு.
உணவு மானியத்திற்கு 8437.57 கோடி ஒதுக்கீடு.
மீன்வளத்துறைக்கு 114975 கோடி ஒதுக்கீடு.
ரூ.500 கோடி செலவில் பருவ நிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.
79, 395 குக்கிராமங்களில் நாள்தோறும் ஒரு நபருக்கு 55 லிட்டர் அளவுக்கு தரமான குடிநீர் வழங்கப்படும்.
2,89,877 வீடுகள் கட்ட 8017.41 கேடி ஒதுக்கீடு.
8,03, 924 குடும்பங்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டுவது அடுத்த 5 ஆண்டுகளில் உறுதி செய்யப்படும்.
கிராமப்புறங்களில் தூய்மை பாரத இயக்கத்தை செயல்படுத்த 400 கோடி ஒதுக்கீடு.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கிராமப்புறங்களில் 1.27 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி.
நமக்கு நாமே திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அனைத்து நகரங்களிலும் மாற்றத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்க ரூ. 2000 கோடி ஒதுக்கீடு.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ. 3 கோடி மீண்டும் வழங்கப்படும்.
திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படும்.
சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமபுற வீட்டு வசதி திட்டத்திற்கு 3,548 கோடி நிதி ஒதுக்கீடு.
நெடுஞ்சாலைத் துறைக்கு 17, 899.17 கோடி ஒதுக்கீடு
புதியதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ. 623.59 கோடி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக, பேருந்து கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி ஒதுக்கீடு.
குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,944.44 கோடி ஒதுக்கீடு.
தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூறி வந்தது தவறு. 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின்சந்தையில் கொள்முதல் செய்தே மின்தேவையை தமிழகம் சமாளித்து வருகிறது.
மின்வாரியக கழகங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆண்களில் 17,980 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உறுதி செய்யப்படும்.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் தயாராக உள்ளன.
சென்னையில் வெளிவட்ட சுற்றுச்சாலைக்கு 1,750 கோடி ஒதுக்கீடு.
வேளாண் மற்றும் வீடுகளுக்கான இலவச மின்சார பயன்பாட்டிற்கு மானியமாக 19,827.77 கோடி ஒதுக்கீடு.
பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 32,599.54 கோடி ஒதுக்கீடு