Tue. Jan 28th, 2025

கேரளத்தில் உள்ள அழகான, அதிசயமான ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், மகன், மகள் ஆகிய நான்கு பேருக்கும் கேட்கும், பேசும் திறன் கிடையாது. இயற்கையின் ஓரவஞ்சனையை கடந்து, உள்ளத்தில் அடிதளத்தில் இருந்து பீறிடும் அன்பு மொழியால் அனைத்துத் தடைகளையும் வென்று, அதிசயக் குடும்பமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்பு மொழியால் அரவணைக்கப்பட்டிருக்கும் அந்த குடும்பத்தின் இளவரசி, பத்து மற்றும் 12 வகுப்புத் தேர்வு பொதுத் தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்திருக்கிறார். அவரது சகோதரர், கல்லூரி படிப்பை பயின்று வருகிறார்.

மனிதப் பிறப்பின் சிறப்பு அம்சங்களை இழந்திருந்தாலும் கூட, அதுகுறித்த வருத்தம் அவர்களிடம் துளியும் இல்லை என்பதை அவர்களின் உடல்மொழி அழகாக வெளிப்படுத்துகிறது… இயற்கையை மிஞ்சிய அதிசயமாக வாழும் அவர்கள், பார்வையாளர் எல்லோருக்கும் உந்து சக்தியே….

மலையாளத்தில் உரையாடல் அமைந்திருந்தாலும் கூட அன்பின் மொழி முன்பு புரிதல் கடினமாக இல்லை.