Thu. Nov 21st, 2024

கோவிட் தொற்றால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணையவழி வகுப்புகள் மூலம் கல்வி கற்கும் 9,69,047 அரசு, அரசு உதவிபெறும் சுயநிதி கல்லூரி மாணாக்கர்களுக்கு பிப்ரவரி முதல் மே வரை, எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லாமல் நாளொன்றுக்கு 2GB Data வழங்கப்படும் என்று முதலமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் தலைமைச் செயலகத்தில் மாணவ, மாணவியர்களுக்கு டேட்டா கார்டை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவ, மாணவியர்களுக்கு வாழ்ததுகளையும், அறிவுரையும் கூறினார்.