Fri. Apr 4th, 2025

ஆளும் அ.தி.மு.க அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கான அரசாக விளங்குகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வேளாண்மை செழிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்திவருகிறோம் என்றும் குடிமராமத்து பணியால் ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாக்காமல் தடுத்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

பெரும்பிடுகு முத்தரையரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா என்று கூறிய முதலமைச்சர், திருச்சியில் முழு உருவச்சிலையுடன் கூடிய முத்தரையர் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.

சிறு-குறு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை ஆளும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் தனது பேச்சில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.