Sat. May 4th, 2024

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது…

வடபழனி, கந்தக் கோட்டம், சூளை அங்காள பரமேஸ்வரி, படவேட்டம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு தடை.

நாளை முதல் 9 ம் தேதி வரை தடை தொடரும்.

இதேபோல், மதுரையில் 4 முக்கிய கோவில்களில் வரும் 8-ம் தேதி வரை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..

மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் கோவில்களில் பக்தர்களுக்கு தடை.

ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிப்பு.

பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது…

திருச்சி அறிவிப்பு…..

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு தடை!: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 2 முதல் 4ம் தேதி வரை மலைக்கோயிலில் நடக்கும் தெப்ப உற்சவத்தை இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை..


தமிழகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் கொரோனோ தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது..இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது…

இன்று ஒரே நாளில் 1,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்…