Mon. May 6th, 2024

கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார்..பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்..அப்போது அவர் கூறியதாவது :

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உரிமம் இன்றி கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தாமாக முன்வந்து அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் மீறி துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த 15 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் தாமாக முன்வந்து 29 நபர்கள் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் இருந்த 52 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் சரகத்தில் உள்ள சேலம்,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

புகையிலை பொருட்கள் விற்பனை குறித்த தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 506 வழக்குகள் பதிவு செய்து 517 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 88 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சேலம் சரகத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு ஐஜி கூறினார்…